சிற்பம்
நடுகல் போர்வீரன்
நடுகல் போர்வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் போர்வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | பெண்ணேசுவர மடம் |
ஊர் | பெண்ணேசுவர மடம் |
வட்டம் | பையூர் பற்று |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | நடுகல் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
தலைவன் அல்லது குடியின் வெற்றி வேண்டி போரில் ஈடுபட்டு இறந்த வீரன்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நடுகல் போரில் இறந்துபட்ட அல்லது பொதுமக்களது நல்வாழ்விற்காக உயிர் துறந்து செயற்கரிய செயல் செய்த வீரனது நினைவாக நாட்டப்படுவது. இது வீரக்கல் (Hero Stone) அல்லது நினைவுக்கல் (Memorial Stone) என வழங்கப்படும். இறந்துபட்ட வீரனின் உருவத்தை அவன் செய்த வீரதீரச் செயலைக் காட்டும் சிற்பமாகச் செதுக்கி அவனது பெயரையும், சிறப்பையும் கல்லெழுத்துகளில் பொறித்து வைப்பர். பெண்ணேசுவர மடத்தில் மலையைச் சுற்றிலும் தலைப்பலி சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான இச்சிற்பம் பெண்ணேசுவரமடம் கோயிலின் முன்பாக உள்ளது. இதில் வீரன் ஒருவன் வலது கரத்தில் வாளை ஓங்கி பிடித்தபடியும், இடது கரத்தில் கேடயத்தை பிடித்தபடியும் நிற்கிறான். இடையில் நீண்ட மற்றொரு வாள் தொங்குகிறது. உச்சியில் மிகப்பெரிய கொண்டை தலையலங்காரமாய் உள்ளது. இடையில் தொடை வரையிலான அரையாடை அணிந்துள்ளான். கழுத்தில் அணிகள் காட்டப்பட்டுள்ளன. வீரன் எதிரியை தாக்குவதற்கு தயாரான நிலையில் இருப்பதாக இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நடுகல் போர்வீரன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |