சிற்பம்
நவகண்ட வீரன்
சிற்பத்தின் பெயர் நவகண்ட வீரன்
சிற்பத்தின்அமைவிடம் திருவானைக்கோவில்
ஊர் திருவானைக்கோவில்
வட்டம் உத்தரமேரூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே
சிற்பத்தின் வகை நடுகல் புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு
அளவுகள் / எடை உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி
விளக்கம்
நவகண்ட சிற்பம் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் என்ற ஊரின் கிராமநிர்வாக அலுவலகத்தின் எதிரே கண்டறியப்பட்டது. இச்சிற்பத்தின் உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி ஆகும். பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. தலையை அரியும் நிலையில் காட்டப்பட்டுள்ள இச்சிற்பம் கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்த தலைப்பலி வீரன் தலையில் கொண்டையும், முன்கையில் வளைகளும், புஜங்களில் வாகுவளையங்கள், மார்பில் மாலை போன்ற அணிகலன்கள், இடையில் வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையுடன் காட்டப்பட்டுள்ளான். வலது கை தன் நீண்ட வாளால் தலையை அரிகிறது. இடது கையில் வாளின் உறை அல்லது கைப்பிடி காணப்படுகிறது.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.பாலாஜி பாரதி, கோகுலகிருஷ்ணன், சுரேஷ்குமார்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
பண்டைய காலத்தில் அரசர்கள் அல்லது தலைவர்கள் எதிரிகளோடு போரிடச் செல்கையில் தங்கள் தலைவனின் வெற்றி வேண்டி படைவீரர்களில் ஒருவன் தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு தலைப்பலி, நவகண்டம், அவிபலி என்ற பல பெயர்கள் வழக்கில் இருந்துள்ளன. அவ்வாறு உயிர் துறந்த வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகற்கள் பல தமிழகத்தில் பரவலாகக் கிடைக்கின்றன. இந்நடுகற்களில் பலி கொடுக்கப்பட்ட வீரன் பெயர், தலைவன் பெயர், போர் விபரங்கள் ஆகியன கல்வெட்டுகளாய் பொறிக்கப்பட்டிருக்கும். அத்தகையதொரு நவகண்ட சிற்பம் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் என்ற ஊரின் கிராமநிர்வாக அலுவலகத்தின் எதிரே கண்டறியப்பட்டது. இச்சிற்பத்தின் உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி ஆகும். பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது.
குறிப்புதவிகள்
நவகண்ட வீரன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்