சிற்பம்
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் நடுகல் வீரன்
சிற்பத்தின்அமைவிடம் சாத்தனூர் வேடியப்பன் கோயில்
ஊர் சாத்தனூர்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் ஏரிக்கரை
சிற்பத்தின் வகை நடுகல் புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்
விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மல்லிகாபுரம் (சாத்தனூர்) எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (35/1968) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. அதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு. மகேந்திர வர்மனின் 34 ஆம் ஆண்டு எடுத்தனூர் நடுகல் செய்தியுடன் தொடர்புடையது.“கோவிசைய மசீந்திரபருமற்கு முப்பத்தொன்பதாவது வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கையார் சருக்கிருந்த ஊர் போ ந்தை மேற் சக்கரவரு படை வந்த ஞான்று ணாக்கையார் இளமகன் வத்தாவன் மகன் னந் (தி எறி)ந்து பட்டான் கல்.“ முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்தொன்பதாவது (629 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொற்றொக்கை என்பான் தங்கி இருந்த ஊரான போந்தை மேல் சக்கரவன் படை வந்து தாக்கிய போது நாக்கை என்பான் இளையமகன் வத்தாவன் என்பானுடைய மகன் நந்தி என்பவன், இதாவது, நாக்கையின் பேரன் இப்பூசலில் வீரமரணம் அடைந்தான். அவன் நினைவாக எழுந்ததே இந் நடுகல்.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.அருண்குமார் பங்கஜ்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சாத்தனூர் (மல்லிகாபுரம்) பகுதியில் ஐந்து நடுகற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு நடுகல் கல்வெட்டு மட்டும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
நடுகல் வீரன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 11
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்