சிற்பம்
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் நடுகல் வீரன்
ஊர் பாகலஹள்ளி
வட்டம் தருமபுரி
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில்
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         கால்நடைகளையும் காக்கும் பொருட்டு நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர்நீத்த வீரன் பெரிய உருவளவில் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளான். உடல் நேராகவும், கால்களை இடப்பக்கம் நோக்கி பக்கவாட்டில் இயங்கு நிலையிலும் வைத்தபடி நிற்கின்ற இவ்வீரனின் வலது கையில் பெரிய அரிவாளைப் பிடித்துள்ளான். வீரன் அணிந்துள்ள அரையாடையின் இடை முடிச்சுகள் இருபுறம் தொங்குகின்றன. பக்கவாட்டுக் கொண்டையும் நீண்ட அரிவாள் மீசையும் வீரனுக்கு அழகு சேர்க்கின்றன. கழுத்தணிகளும், கை மற்றும் காலில் அணிந்து அணிகளும் குறிப்பிடத்தக்கவை. இடகையில் தனக்கான மதுக்குடுவையைப் பிடித்துள்ளான். அருகில் அவனை நோக்கியவாறு மாடு ஒன்று காட்டப்பட்டுள்ளது. இக்காட்சி தொல்காப்பியம் இலக்கணம் வகுத்த வெட்சித் திணை அல்லது கரந்தைத்திணையில் நடைபெறும் ஆகோளை காட்டி நிற்கிறது எனலாம். இந்நடுகல் வழிபாட்டில் உள்ளது. கல்லின் அருகில் இரும்பாலான நீண்ட வேல் மக்களால் ஊன்றப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

         தருமபுரி மாவட்டத்தில் பாகலஹள்ளி என்னும் ஊரில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் அருகில் திறந்த வெளியில் சில நடுகற்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றன. இந்த நடுகற்கள் விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல்லான இந்த நடுகல் தன் ஆநிரைகளைக் காக்கும் பொருட்டு நடைபெற்ற ஆகோள் பூசலில் இறந்து பட்ட வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நினைவுக்கல்லாகும். இக்கல்லில் ஆவினம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கல் தற்போது வரை வழிபாட்டில் உள்ளது.

ஆவண இருப்பிடம் பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில்
நடுகல் வீரன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 22 May 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்