சிற்பம்
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் நடுகல் வீரன்
சிற்பத்தின்அமைவிடம் தண்ட்ராம்பட்டு வேடியப்பன் கோயில்
ஊர் தண்ட்ராம்பட்டு
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் ஏரிக்கரை
சிற்பத்தின் வகை நடுகல் புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முதலாம் நரசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
a:1:{i:0;s:3719:"இங்குள்ள இரு நடுகற்களில் ஒன்றில் வீரனின் நெற்றியிலும், மார்பிலும் அம்புகள் பாய்ந்தவாறு காட்டப்பட்டுள்ளன. வீரன் இடது கையில் வில்லும், வலது கையில் ஓங்கிய வாளுமாய் காட்சியளிக்கிறான். காலின் அருகே கள்குடம் வைக்கப்பட்டுள்ளது. வீரனின் தலைமுடிக்கற்றைகள் பரக்க போரிடும் நிலையில் இயங்கு நிலையை இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு நடுகல்லில் வீரன் இடது கையில் வில்லும், வலது கையில் ஓங்கிய வாளுமாய் காட்சியளிக்கிறான். இச்சிற்பங்கள் பலகைக் கற்களில் நடுப்பகுதியில் சதுரவடிவக் கட்டத்தில் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. சிற்பத்தின் மேற்பகுதியில் வட்டெழுத்தில் இவ்வீர்ர்களைப் பற்றிய பீடும் பெயரும் எழுதப்பட்டுள்ளன. “கோவிசைய நரை சிங்கபருமற்கு யா ண்டேழாவது மேற்கோவ லூர் மேல் வாணகோ முத்தரைசர் நாடு பாவிய தஞ்சிற் றப்படிகள் பொன்மாந்தனார் மேற் வந்த ஞான்று பொன்மாந்தானார்க்காய்ப் பட்டா ன் கடுவந்தையார் மகன் விற்சிதை கல் வாண கோக்கட மர்“ முதலாம் நரசிம்ம வர்மப் பல்லவனின் ஏழாம் ஆட்சி ஆண்டில் (637 CE) அவனுக்கு அடங்கிய வாணகோ முத்தரசன் தன் நாட்டு எல்லையைக் கடந்து முத்தரசனின் நாட்டுள் பரவிப் படர்ந்து அவன் நாட்டுப் பகுதிகளைக் கவர்ந்து தன் நாட்டு எல்லையை விரிவுபடுத்திய தன் சிற்றப்பன் பொன்மாந்தன் என்பவன் மேல் போர் செய்ய மேல் கோவலூர் நாட்டின் மேல் படை செலுத்திய போது பொன்மாந்தன் சார்பில் கடுவந்தை என்ற வேளின் மகன் அல்லது வீரன் விற்சிதை என்பவன் போரிட்டு வீரமரணமடைந்துள்ளான். அவனுக்காக எடுக்கப்பட்ட இந்நடுகல்லை எடுப்பித்தவன் வாணகோக் கடமன் என்று கல்வெட்டு பகர்கின்றது.";}
ஒளிப்படம்எடுத்தவர் திரு.அருண்குமார் பங்கஜ்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
செங்கம் பகுதியில் உள்ள தண்ட்ராம்பட்டு என்னும் சிற்றூரில் இரண்டு நடுகற்கள் உள்ளன. இவை வேடியப்பன் கோயில் என்றழைக்கப்பட்டு தற்போதும் வழிபாட்டில் உள்ளன. இந்நடுகற்கள் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்தவை. இந்நடுகற்களில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இதனைத தெரிவிக்கின்றன.
குறிப்புதவிகள்
நடுகல் வீரன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 18
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்