
நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவி (சதிக்கல்)
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவி (சதிக்கல்) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |
ஊர் | பாகலஹள்ளி |
வட்டம் | தருமபுரி |
மாவட்டம் | தருமபுரி |
அமைவிடத்தின் பெயர் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
இந்த நடுகல்லில் வீரமுடன் கணவனுடன் உயிர் துறந்த பெண்ணும் காட்டப்பட்டுள்ளதால் இதனை சதிக்கல் என்றும் கூறலாம். வீரனும் அவன் மனைவியும் நின்ற நிலையில் ஒரே பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளனர். வீரன் நேராக நின்ற நிலையில் கீழே தொங்கவிடப்பட்டுள்ள இரு கைகளிலும் வாளினைப் பிடித்துள்ளான். கழுத்தில் பதக்கத்துடன் கூடிய ஆரம் அழகு செய்கின்றது. இடையில் வரிந்து கட்டிய அரையாடை காணப்படுகின்றது. பக்கவாட்டு கொண்டை இருவருக்கும் தலையணியாக விளங்கினாலும் வீரனுக்கு நீண்ட முடிக்கற்றை உச்சியிலிருந்து வலதுபுறம் தொங்குகிறது. அருகில் கணவனுடன் உயிர் நீத்த வீரப்பெண்ணான அவன் மனைவி முழங்கால் வரையிலான ஆடை உடுத்தி, இரு கைகளையும் தொங்கவிட்டவாறு நேராக நிற்கிறாள். கணவன் மனைவி இணையைக் காணுகையில் தமிழரின் அகம், புறம் எனும் இரு கோட்பாடுகளிலும் வெற்றி கண்டவர்களாக புலப்படுகின்றனர். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
போரில் இறந்துபட்ட வீரனுக்கும் அவனோடு உயிர்நீத்த அவன் மனைவிக்கும் எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். அவ்வகையில் பாகலஹள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள வீரபத்திரர் கோயில் வாசலில் திறந்தவெளியில் உள்ள இந்த நடுகல் வீரமுடன் கணவனுடன் உயிர் துறந்த பெண்ணுக்கு நடுகல் எடுப்பிக்கப்பட்டுள்ளதால் இதனை சதிக்கல் என்றும் கூறலாம். இந்நடுகல் புடைப்புச் சிற்பமாக பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல்லான இந்த நினைவுக்கல் இறந்து பட்ட வீரனோடு உயிர் துறந்த அவனது மனைவியும் சேர்ந்து சிறப்பிக்கப்பட்டுள்ளமையைக் காட்டுகிறது. |
|
ஆவண இருப்பிடம் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 May 2020 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |