சிற்பம்
அடியவரான அரசர்
அடியவரான அரசர்
சிற்பத்தின் பெயர் | அடியவரான அரசர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குன்னாண்டார் கோயில் |
ஊர் | குன்னாண்டார் கோயில் |
வட்டம் | கீரனூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | அரச உருவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
இறைத் திருமுன்னின் முன்னே அடியவராக நிற்கும் அரசன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அடியவர் வைஷ்ணவ நிலையில் வலது காலை ஊன்றி, இடது காலை சற்று தளர்வாக வைத்து, இரு கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நிற்கிறார். தலையில் அளக சூடகம் என்னும் தலைக்கோலத்தைக் கொண்டுள்ளார். முறுக்கிய மீசையுடனும், உருட்டிய விழிகளுடனும் உள்ள இவ்வடியார் தோள்களில் தோள் மாலை, கழுத்தில் மணிமாலை, கைகளில் தோள் வளை, கடக வளை, முன் வளைகள், விரல்களில் மோதிரங்கள், மார்பில் முப்புரி நூல் ஆகியன அணிந்துள்ளார். அந்தரீயம் எனப்படும் கீழாடை முழங்காலுக்கு மேலே அரையாடையாக அமைந்துள்ளது. இடைக்கட்டு எனப்படும் கடி பந்தம் வலது தொடையில் வளைவாகத் தொங்குகின்றது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
அடியவரான அரசர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |