சிற்பம்

சோழர் குலப் பெண்

சோழர் குலப் பெண்
சிற்பத்தின் பெயர் சோழர் குலப் பெண்
சிற்பத்தின்அமைவிடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை அரச உருவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன்
விளக்கம்
அர்த்தமண்டப தென்புற பஞ்சரக் கோட்டத்தில் நின்ற நிலையில் உள்ள சோழர் குலப் பெண்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
அர்த்தமண்டப தென்புற பஞ்சரக் கோட்டத்தில் சோழர் குலப் பெண் ஒருவள் வைஷ்ணவ நிலையில் வலது காலை நன்றாக ஊன்றி, இடது காலை சிறிதே மடக்கி உடலை வளைவோடு அமைத்து நிற்கிறாள். இவள் சோழர் குல அரசியாகலாம். கூந்தலை அள்ளிக் கொண்டை போட்டு, தலைக்கொண்டை பக்கவாட்டில் சாய்ந்து அமைந்துள்ள குந்தளம் தலைமுடியைக் கொண்டுள்ளாள். நெற்றியில் இரண்டு வரிசையிலான முத்துக்களால் ஆன நெற்றிப்பட்டை அணிந்துள்ளாள். மேற்காதுகளில் செவிப்பூ அழகு செய்கிறது. நீள் காதுகளில் பத்ரகுண்டலங்களும், கழுத்தில் கண்டிகை, சவடியும், தோள்களில் வாகுமாலை, கைகளில் தோள்வளை, கடக வளை (முழங்கையில்), முன் கைகளில் முன் வளைகள் ஆகியன அணி செய்கின்றன. கால்களில் பாடகம் விளங்குகின்றது. பாதங்களில் அரியகம் அழகு செய்கின்றது. இடையில் அரைப்பட்டிகையும், தாரகைச் சும்மையும் அமைந்து மடிப்புகளுடன் நீண்ட பட்டாடை அணிந்துள்ளார். இடைக்கட்டின் முடிச்சு முன் தொங்குகிறது. வலது கை ஊரு முத்திரையாக தொடையிலும், இடது கை மலரைப் பிடித்தபடியும் அமைந்துள்ளன. வனத்த இளமை பொங்கும் தனங்களுடன் (மார்பில் கச்சை ஏதும் காட்டப்பட வில்லை. அக்கால வழக்கப்படி மேலாடையின்றி உள்ளாள்) கொடியிடையாளாக எழில் மிக்க தோற்றத்துடன் இப்பெண் விளங்குகிறாள்.
குறிப்புதவிகள்
சோழர் குலப் பெண்
சிற்பம்

சோழர் குலப் பெண்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 19
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்