சிற்பம்

பாகுபலி

பாகுபலி
சிற்பத்தின் பெயர் பாகுபலி
சிற்பத்தின்அமைவிடம் கழுகு மலை வெட்டுவான் கோயில்
ஊர் கழுகு மலை
வட்டம் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சமணம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
24 சமண தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷபதேவராகிய ஆதிதேவரின் மகனான பாகுபலி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாமவரான ரிசபதேவருக்கு நூறு புதல்வர்கள், முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி. பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க, பகுபாலி வெகுண்டு சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். போரில் தோற்ற தமையனின் நன்மைக்காக பாகுபாலி துறவறம் மேற்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. துறவிலும் தவத்திலும் நாட்டம் மிகக் கொண்டு கடுந்தவம் மேற்கொண்டவர். இவர் மேல் செடி கொடிகள் முளைத்து இவர் உடலை மறைத்ததாகக் கூறுவர். இதனை விளக்கும் வகையில் இவரது உடலில் கால்களிலும் கைகளிலும் கொடிகள் செதுக்கப்பட்டிருக்கும் வடிவுடன் காட்சி தருவார். பாகுபலியின் உடலின் மேல் சுற்றியிருக்கும் கொடிகள் வாஸந்திக் கொடி அல்லது மாதவிக்கொடி என்ற பெயரில் அழைக்கப்படும் காட்டுக் கொடிகள் (திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு). விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் காணக்கூடிய பல கோயில்களிலும் பாகுபலியின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன.  திருமலை, விழுக்கம், கரந்தை, திருப்பறம்பூர் ஆகிய ஜினாலயங்களில் பாகுபலியின் கருங்கற்சிலை அல்லது உலோக சிற்பங்கள் இடம்பெறுகின்றன. இவரின் சகோதரிகள் பிராம்மி, சுந்தரி என்பவர்கள். உடலில் கொடி சுற்றிய நிலையில் தாள் தாழ் தடக்கை (காயோசர்க்கம்) என்ற நிலையில் பாகுபலி நின்றுள்ளார். பாகுபலியின் தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது.அவரின் இருபுறமும் அவரின் சகோதரிகள் பிராம்மியும், சுந்தரியும் நின்றுள்ளனர்.
குறிப்புதவிகள்
பாகுபலி
சிற்பம்

பாகுபலி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்