சிற்பம்
மகாவீரர்
மகாவீரர்
சிற்பத்தின் பெயர் | மகாவீரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | ஆனை மலை |
ஊர் | ஒத்தக்கடை |
வட்டம் | மேலூர் |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சமணம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
24 சமண தீர்த்தங்கரர்களில் 24-வது தீர்த்தங்கரர் மகாவீரர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சமண தீர்த்தங்கரர்களில் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமானர் என்ற இயற்பெயர்கொண்ட மகாவீரர் கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள குண்டா என்ற இடத்தில் சித்தார்த்தர்-திரிசலாவுக்கு மகனாக அரசக் குடும்பத்தில் பிறந்தார். சமணக் கொள்கைகளில் பற்று கொண்ட மகாவீரர் மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட மகாவீரர் அவர்கள், “சாலா” என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர் “மகாவீரர்” என அழைக்கப்பட்டார். மகாவீரர் என்றால், ‘பெரும்வீரர்’ என்று பொருள் ஆகும். தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார். இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார். தமது காலத்திற்கேற்ப சமண மத கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார். ஆனை மலையில் உள்ள மகாவீரர் சிற்பம் அர்த்த பத்மாசனத்தில் பீடத்தின் மேல் வடிக்கப்பட்டுள்ளது. தலையின் மேல் முக்குடை காட்டப்பட்டுள்ளது. அவை மகாவீரர் கூறிய மூன்று ரத்தினங்கள் என்னும் சமணக் கொள்கைகளை குறிப்பிடுவனவாக காட்டப்படும் குறியீடாகும். மகாவீரரின் இருபுறமும் சாமரத்தைக் கையில் கொண்டு இருவர் காட்டப்பட்டுள்ளனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
மகாவீரர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |