
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |
ஊர் | பாகலஹள்ளி |
வட்டம் | தருமபுரி |
மாவட்டம் | தருமபுரி |
அமைவிடத்தின் பெயர் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
நின்ற நிலையில் வீரப்பெண் காட்டப்பட்டுள்ளாள். முழங்கால் வரையிலான ஆடை உடுத்தி, பக்கவாட்டுக் கொண்டை தலையில் அணி செய்ய, கழுத்தில் ஆரம், கை வளை, கால் சதங்கை இவற்றையணிந்தவாறு வலது கையில் ஆயுதம் ஒன்றை உயர்த்திப் பிடித்துள்ளாள். தொங்க விடப்பட்டுள்ள இடது கையிலும் ஏதோ ஒன்று காணப்படுகின்றது. இப்பெண்ணின் உருட்டிய விழிகளும், வீராவேசத்துடன் நிற்கும் தோரணையும் காணுகையில் இம்மண்ணுக்கேயுரிய பெண்மையின் வீரமும் புலப்படுகிறது. தலையில் பக்கவாட்டுக் கொண்டையும், ஆடையணிகளும் கொண்டு இச்சிற்பத்தின் காலத்தை கணிக்கலாம். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இந்நடுகல் பெண்ணின் வீரத்தைப் போற்றி நிற்கும் ஒரு சதிக்கல்லாகும். பலகைக் கல் சிற்பமாக அமைந்துள்ள இச்சிற்பத்தில் பெண் மட்டும் மையத்தில் தனியொருவளாக நிற்பதைக் காண்கையில் அவளின் ஏதோ ஒரு வீரச்செயலுக்கு இந்த நினைவுக் கல் அவளுக்கு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதமுடிகிறது. |
|
ஆவண இருப்பிடம் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 May 2020 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |