சிற்பம்
சதிக்கல்
சிற்பத்தின் பெயர் சதிக்கல்
சிற்பத்தின்அமைவிடம் வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு
ஊர் பாகலஹள்ளி
வட்டம் தருமபுரி
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

          போரில் இறந்துபட்ட வீரனுக்கும் அவனோடு உயிர்நீத்த அவன் மனைவி மக்களுக்கும்  நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பாகலஹள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள வீரபத்திரர் கோயில் வாசலில் திறந்தவெளியில் உள்ள இந்த நடுகல் வீரமுடன் கணவனுடன் உயிர் துறந்த பெண்ணுக்கு நடுகல் எடுப்பிக்கப்பட்டுள்ளதால் இதனை சதிக்கல் என்றும் கூறலாம். இந்நடுகல் புடைப்புச் சிற்பமாக பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் வீரப்பெண் காட்டப்பட்டுள்ளாள். தலையில் பக்கவாட்டுக் கொண்டையும், ஆடையணிகளும் கொண்டு இச்சிற்பத்தின் காலத்தை கணிக்கலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

          தருமபுரி மாவட்டத்தில் பாகலஹள்ளி என்னும் ஊரில் உள்ள வீரபத்திரர் கோயில் முன்பகுதியில் பதினொரு நடுகற்கள் திறந்த வெளியில் காணப்படுகின்றன. இவற்றில் சில பெண்களுக்காக எடுப்பிக்கப்பட்ட சதிக்கற்களாகும். இந்த நடுகற்கள் அனைத்தும் விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல் இறந்து பட்ட வீரனோடு உயிர் துறந்த அவனது மனைவியும் சேர்ந்து அந்த நடுகல்லில் சிறப்பிக்கப்பட்டுள்ளாள். குறும்பர்கள்  பழங்காலத்திலிருந்தே மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வாழும் தொல்குடி இன மக்கள் ஆவர். ஆநிரைகளோடு தொடர்புடைய அவர்களின் வாழ்வில் ஆநிரைகளை காத்தற் பொருட்டு இறந்துபட்ட வீர்ர்களுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகற்கள் எல்லாம் ஓரிடத்தில் அமைந்திருக்கும். அவ்விடம் குறும்பர்மண்டு என்று அழைக்கப்படும். குறும்பர்மண்டில் காணப்படும் தங்கள் முன்னோர்களான நடுகல் தெய்வங்களுக்கு அவர்கள் வழிபாடு நடத்துவர்.

ஆவண இருப்பிடம் வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு
சதிக்கல்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 21 May 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்