
நடுகல் வீரர்கள்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரர்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |
ஊர் | பாகலஹள்ளி |
வட்டம் | தருமபுரி |
மாவட்டம் | தருமபுரி |
அமைவிடத்தின் பெயர் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
ஆகோள் பூசலில் இறந்துபட்ட இரு வீரர்களுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். பாகலஹள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள வீரபத்திரர் கோயில் வாசலில் திறந்தவெளியில் கிடக்கின்ற பதினொரு நினைவுக்கற்களில் இதுவும் ஒன்றாகும். இந்நடுகல் புடைப்புச் சிற்பமாக பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இரு வீர்ர்கள் கையில் வில்லுடன் காட்சியளிக்கின்றனர். இருவரில் முதலாமர் சற்று மெலிந்த தேகத்தினராய் காணப்படுகிறார். வீரர்களின் ஆடையணிகளைக் கொண்டு இச்சிற்பத்தின் காலத்தை கணிக்கலாம். இருவரும் அரையாடை அணிந்துள்ளனர். தலையில் உச்சிக்கொண்டை விளங்குவதால் இருவரும் இளையராக இருக்கலாம். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
ஆவண இருப்பிடம் | வீரபத்திரர் கோயில் - குறும்பர்மண்டு |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 May 2020 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |