சிற்பம்
தவ்வை
சிற்பத்தின் பெயர் தவ்வை
சிற்பத்தின்அமைவிடம் காங்கேயம் புலிக்குத்திப்பட்டான் கல்
ஊர் காங்கேயம்
வட்டம் காங்கேயம்
மாவட்டம் திருப்பூர்
அமைவிடத்தின் பெயர் காங்கேயம் ஊர்ப்புறப்பகுதி
சிற்பத்தின் வகை புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நீள் செவ்வக வடிவ பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள தவ்வை மற்றும் உடன்கூட்டத்தாரின் புடைப்புச் சிற்பம் எளிமையான கலைக்கோலத்தில் சிறிய உருவங்களாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நடுவே தவ்வை எனப்படும் சேட்டை தேவி அமர்ந்திருக்கிறாள். இடது கையை இடது தொடையில் வைத்தவாறும், வலது கையில் நீண்ட தண்டுடைய மலரைப் பிடித்தவாறும் அமர்வுக் கோலம். தேவியின் இடதுபக்கம் நின்றுள்ள மாந்தி தன் கையில் சிறிய செண்டைப் பிடித்துள்ளாள். வலதுபுறம் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ள எருமைத் தலையை உடைய மாந்தன் தன் வலது கையில் தண்டினைப் பிடித்துள்ளான்.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அமைந்துள்ள இந்த தவ்வை எனப்படும் சேட்டை தேவியின் புடைப்புச் சிற்பம் கோயிலின் வெளிப்புறப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கிராம மக்களால் இந்த தெய்வம் வழிபடப்பட்டு வருகின்றது.
குறிப்புதவிகள்
தவ்வை
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்