சிற்பம்

தாழி ஏரி கல்வெட்டு

தாழி ஏரி கல்வெட்டு
சிற்பத்தின் பெயர் தாழி ஏரி கல்வெட்டு
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை கல்வெட்டு
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.948 (சக ஆண்டு 870)
விளக்கம்
தாழி ஏரிக்கல்வெட்டு என்று இக்கல்வெட்டு பெயரிடப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை அடுத்துள்ள கொல்லம்பாளையம் கெங்காடு என்னுமிடத்தில் இக்கல்வெட்டு கிடைத்துள்ளது. “தாழி ஏரி“ என்ற ஏரி ஒன்றை ஏற்படுத்தியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. முற்கால சேரமன்ன்ன் கோ ரவி கோதை ஆட்சிக்காலம் கி.பி.948 சக ஆண்டு 870 இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. வஞ்சி நகரைச் சேர்ந்த தென்னவன் பேரரையனாயின வேண்டாழி என்பவன் ஈரோட்டு மக்களுக்காகத் தன்பெயரில் “தாழி ஏரி“ என்ற ஏரி ஒன்றை ஏற்படுத்தியதை இக்கல்வெட்டுட குறிப்பிடுகிறது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
முற்கால அரசர்கள் நீர் வளத்தினையும், நில வளத்தினையும் காக்கும் பொருட்டு பல நீர்நிலைகளை ஏற்படுத்தி, அவற்றை தனியாக நிர்வகிக்க வாரியங்களையும் ஏற்படுத்தினர். குளம் மற்றும் ஏரிகளை வெட்டுவித்தல் அரசனின் முதன்மைக் கடமையாக பண்டு கருதப்பட்டது. அவ்வகையில் “தாழி ஏரி“ என்ற ஏரி ஒன்றினை வெட்டுவித்த சேரமன்னனின் கல்வெட்டு இதுவாகும். முற்கால சேரமன்னன் கோ ரவி கோதையின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. வஞ்சி நகரைச் சேர்ந்த தென்னவன் பேர்ரையனாயின வெண்டாழி என்பவன் ஈரோடு மக்களுக்காகத் தன் பெயரில் “தாழி ஏரி“ என்ற ஏரி ஒன்றை ஏற்படுத்திய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.948 (சக ஆண்டு 870) ஆகும். ஈரோட்டை அடுத்துள்ள கொல்லம்பாளையம் கெங்காடு என்னுமிடத்தில் இக்கல்வெட்டு கிடைத்துள்ளது.
குறிப்புதவிகள்
தாழி ஏரி கல்வெட்டு
சிற்பம்

தாழி ஏரி கல்வெட்டு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்