Back
சிற்பம்

புலிகுத்திப்பட்டான் நடுகல்

புலிகுத்திப்பட்டான் நடுகல்
சிற்பத்தின் பெயர் புலிகுத்திப்பட்டான் நடுகல்
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை நடுகல் புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நீள் செவ்வக வடிவ பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள புலிக்குத்திப் பட்டான் கல் எனப்படும் இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் தன் நீண்ட கூரிய ஈட்டியால் தாக்கவரும் புலியின் வயிற்றில் குத்திக் கொல்லும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. சிற்பம் தெளிவில்லை. வீரன் நேர்முகமாக காட்டப்பட்டுள்ளான். அரையாடை உடுத்தியுள்ளான். முன்னங்கால்களால் வீரனை தாக்க முற்படும் பாயும் புலி வீரனை நோக்கிய முகமாகவுள்ளது. பிற்காலத்தைச் சேர்ந்த நடுகல் இதுவென்பதை இச்சிற்பத்தின் உருவமைதி காட்டி நிற்கிறது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
பாய்ந்து தாக்கவரும் புலியை தன் வாளால் குத்தும் வீரனின் நடுகல் இதுவாகும். சக்திநகர் சக்கரை ஆலை ஆப்பக்கூடல் எல்லைக்குள் கிடைத்த இந்நடுகல் கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
குறிப்புதவிகள்
புலிகுத்திப்பட்டான் நடுகல்
சிற்பம்

புலிகுத்திப்பட்டான் நடுகல்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்