Back
சிற்பம்

பெரிய சேமூர் நடுகல்

பெரிய சேமூர் நடுகல்
சிற்பத்தின் பெயர் பெரிய சேமூர் நடுகல்
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை நடுகல் புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
மிகவும் எளிமையான ஆனால் அழகு வாய்ந்த உருவமைதியுடன் கூடிய நடுகல் இதுவாகும். வீரனொருவன் கையில் குறுவாளுடனும், வில்லுடனும் அகன்ற மார்பினனாய், விரிந்த தோளினனாய், இளமையுடன் வீரம் ததும்பும் இனிய முகத்தின்னாய் உச்சிக் கொண்டையுடன் காட்சியளிக்கிறான். நெற்றியில் வெற்றித்திலகம் காட்டப்பட்டுள்ளது. நீள் செவிகளில் அணிகள் ஏதுமின்றி, கழுத்தில் சவடி அணிந்து, இறுக்கிக் கட்டிய இடைக்கட்டுடன் கூடிய அரையாடையுடன் காணப்படும் இந்த இளைய வீரனின் நடுகல் எழில் வாய்ந்தது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
ஈரோட்டினை அடுத்துள்ள சேமூரில் கிடைத்த பெரிய சேமூர் நடுகல் எனப்படும் இந்நடுகல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகும். போர்க்களத்தில் வீரமரணம் எய்திய வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகல்லாகும். போர்க்கோலத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.
குறிப்புதவிகள்
பெரிய சேமூர் நடுகல்
சிற்பம்

பெரிய சேமூர் நடுகல்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்