சிற்பம்
கண்டராதித்தன்
சிற்பத்தின் பெயர் கண்டராதித்தன்
சிற்பத்தின்அமைவிடம் கோனேரிராஜபுரம் (திருநல்லம்) உமாமகேசுவரர் கோயில்
ஊர் திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
அமைவிடத்தின் பெயர் கோனேரிராஜபுரம் (திருநல்லம்) உமாமகேசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் - செம்பியன் மாதேவியார்
விளக்கம்
a:1:{i:0;s:1426:"முற்காலச் சோழ அரசர் கண்டராதித்த தேவரின் பட்டத்தரசியான செம்பியன் மாதேவியார் கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம் கோயிலை கற்றளியாக எடுப்பித்தார். இக்கோயிலில் செம்பியன் மாதேவியார், கண்டராதித்தர் சிவபூசை செய்யும் காட்சியை புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளார். இக்கோயிலுக்கு தன் கணவர் பெயரான “ஸ்ரீகண்டராதித்தர்“ என்ற பெயரையே சூட்டினார். இச்சிற்பத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் ஸ்ரீகண்டராதித்த தேவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. கண்டராதித்த தேவர் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில், கைகளைக் கூப்பி வணங்கியவாறு காட்டப்பட்டுள்ளார். ";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ள கண்டராதித்த சோழனின் மனைவியாரான செம்பியன் மாதேவியாரால் கற்றளியாக்கப்பட்ட திருநல்லம் – கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகும். பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 34-ஆவது சிவத்தலமாகும். கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வலப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். இக்கோயிலின் சுவர்ப்பகுதியில் அமைந்துள்ள உத்தமசோழனின் கல்வெட்டின் மேற்பகுதியில் இந்த புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. கண்டராதித்தன் சிவபூசை செய்யும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கண்டராதித்தன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 18
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்