கல்வெட்டு
கொங்கற்புளியங்குளம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கொங்கற்புளியங்குளம்
ஊர் கொங்கற்புளியங்குளம்
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் பெருமாள் கோயில் மலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இரண்டாவது கல்வெட்டில் உள்ள ‘குறு’ என்ற சொல்லைக் ‘கூறு’ எனக் கொள்ளலாம். ‘கொடல்’ என்ற சொல்லுக்குக் ‘கொட்டல்’ செதுக்குதல் எனப்பொருள் கொண்டு ‘கொடல்கு என்ற சொல்லுக்குக் ‘கொட்டுவதற்கு குடைவதற்கு எனப் பொருள் கொள்ளலாம். இக்கல்வெட்டின் இறுதியில் இரண்டு குறியீடுகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றின் சரியான பொருள் விளங்கவில்லை. பொன் கொடை பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுவதால் பொன்னின் எடை அல்லது எண்ணிக்கையைக் குறிக்கும் குறியீடுகளாக இவற்றைக் கருதலாம். குகைத்தளத்திலிருந்து சிறு தொலைவில் உள்ள பாறை முகப்புகளில் இடைவெளிவிட்டு தனித்தனியே வெட்டப்பட்டுள்ள மூன்று கல்வெட்டுகளுள் இக்கல்வெட்டு நடுவில் உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். செற் அதன் என்பவர் குகைத்தளத்தின் இப்பகுதியைக் குடைவிப்பதற்குப் பொன் கொடை அளித்துள்ளார். பொன்னின் மதிப்பு கல்வெட்டின் இறுதியில் குறியீடாக உள்ளது போல் தெரிகிறது.
குறிப்புதவிகள்
கொங்கற்புளியங்குளம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 105
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு