கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு நாகேசுவரசாமி கோயில் கருவறை வடக்குச் சுவரில் உள்ளது. அம்பலவன் பழவன் நக்கனான விக்கிரம சோழ மாராயன் என்பான், பரகேசரிவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில், சித்திரை மாத வியாழக்கிழமையும் பரணி நாளுமான சூரிய கிரகணத்தின் அன்று நொந்தா விளக்கெரிக்கத் தொண்ணூற்றாறு ஆடு அளித்ததைக் குறிக்கிறது. இவ்வாடுகளைப் பெற்றுக்கொண்டு, மன்றாடி சோமாசி கண்ணன் அரைவிளக்குக்கு மாதத்திற்கு முந்நாழி உழக்கும். மாதேவன் சேரி, மாதேவன் கோள், மாதேவன் சிற்றப்பிரான் ஆகிய மூவரும் அரை விளக்குக்கு மாதத்திற்கு முந்நாழி உழக்கும் நெய் அளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |