Back
சிற்பம்

தலைப்பலி நடுகல் வீரன்

தலைப்பலி நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் தலைப்பலி நடுகல் வீரன்
சிற்பத்தின்அமைவிடம் பெண்ணேசுவர மடம்
ஊர் பெண்ணேசுவர மடம்
வட்டம் பையூர் பற்று
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை நடுகல்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
சீறூர் மன்னன், வேந்தன், தலைவன் அல்லது குடியின் வெற்றி வேண்டி தலையை அரிந்து பலியிடும் தலைப்பலி வீரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
தலைப்பலி கொடுத்தல் அணங்காகிய பெண் தெய்வங்களுக்கு உரிய வழிபாடாகும். வீரர்கள் வெற்றி வேண்டி காளி, கொற்றவை, துர்க்கை முதலிய அணங்கு தெய்வங்களுக்கு தங்கள் தலையை தாங்களே அரிந்து பலி கொடுத்தல் பண்டு வழக்கம். இத்தகைய சிற்பங்கள் கி.பி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாட்டில் பரவலாகக் கிடைக்கின்றன. வேத வேள்விகளில் காணப்படும் நவகண்டம் என்னும் பலியிடல் அதாவது தன் உடம்பின் கை, கால் உள்ளிட்ட ஒன்பது உறுப்புகளை வெட்டி அர்ப்பணித்தல் என்பது வேறு. நவகண்டம் என்றால், ஒவ்வொரு அங்கமாக வெட்டிப் பலி கொடுத்தல் ஆகும். தலையை மட்டும் அரிந்து பலி கொடுக்கும் இம்மரபு வேறு. இந்தச் சிற்பத்தில் தலையை மட்டுமே வெட்டிப் பலி கொடுப்பதாக உள்ளதால் இதற்கு நவகண்டம் என்ற பெயர் பொருந்தாது. இந்த சிற்பத்தில் வீரனின் கழுத்துப்பகுதியில் நீண்ட வாள் பாய்ந்துள்ளது. தலை அரிபட்ட நிலை தெரிகிறது. அவ்வீரன் இரண்டு கைகளை கூப்பி வணங்கிய நிலையில், பணிவுடன் தலையைத் தாழ்த்தியுள்ளான். இது வெற்றி வேண்டி அல்லது வெற்றி பெற்ற பின் சமர்ப்பிக்கும் பலியாக கொள்ளலாம். வீரனுக்கு பக்கவாட்டில் கொண்டை உள்ளது. கைகளில் தோள்வளை, முன் வளைகள் அணிந்துள்ளான். இடைக்கட்டுடன் கூடிய அரையாடை அணிந்துள்ளான். வீரனின் பக்தியும் பணிவும் மெச்சும் படியாக உள்ளது.
குறிப்புதவிகள்
தலைப்பலி நடுகல் வீரன்
சிற்பம்

தலைப்பலி நடுகல் வீரன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்