Back
சிற்பம்

நடுகல் தலைப்பலி வீரன்

நடுகல் தலைப்பலி வீரன்
சிற்பத்தின் பெயர் நடுகல் தலைப்பலி வீரன்
சிற்பத்தின்அமைவிடம் பெண்ணேசுவர மடம்
ஊர் பெண்ணேசுவர மடம்
வட்டம் பையூர் பற்று
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை நடுகல்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
சீறூர் மன்னன், வேந்தன், தலைவன் அல்லது குடியின் வெற்றி வேண்டி தலையை அரிந்து பலியிடும் தலைப்பலி வீரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
நடுகல் போரில் இறந்துபட்ட அல்லது பொதுமக்களது நல்வாழ்விற்காக உயிர் துறந்த வீரனது நினைவாக அமைக்கப்படுவதாகும். இது வீரக்கல் (Hero Stone) அல்லது நினைவுக்கல் (Memorial Stone) என வழங்கப்படும். இறந்துபட்ட வீரனின் உருவத்தை அவன் செய்த வீரதீரச் செயலைக் காட்டும் சிற்பமாகச் செதுக்கி அவனது பெயரையும், சிறப்பையும் கல்லெழுத்துகளில் பொறித்து வைப்பர். இவ்வாறான நடுகற்களில் வீரன் தன் தலையைத் தானே வாளால் அரிந்து கொள்வது போல உள்ள சிற்பங்களும் காணப்படுகின்றன. இது தலைப்பலி எனப்படும் நவகண்ட சிற்பங்களாகும். இது தன் தலைவன் அல்லது குடிகளின், மக்களின் நலன் வேண்டி வீரன் தன் தலையை அரிந்து கொற்றவை, துர்க்கை, காளி போன்ற தெய்வங்களுக்கு பலியிடலாகும். இதனை கலிங்கத்துப்பரணி, தக்கயாக பரணி போன்ற போர் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இவ்வாறாக செயற்கரிய செய்யும் வீரர்களுக்கு நவகண்ட சிற்பங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் வராகர் குகையில் அமைந்துள்ள மகிஷமர்த்தினியின் புடைப்புச் சிற்பத் தொகுதியில் தலைப்பலி கொடுக்கும் வீரனின் உருவம் இடம் பெற்றுள்ளது. முற்காலச் சோழர் கோயில்களில் வடபுறம் அமைந்துள்ள துர்க்கை அல்லது மகிஷாசுரமர்த்தினி கோட்டங்களின் இருபுறமும் இந்த தலைப்பலி வீரர்களின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பெண்ணேசுவர மடத்தில் மலையைச் சுற்றிலும் தலைப்பலி சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான இச்சிற்பம் பெண்ணேசுவரமடம் கோயிலின் முன்பாக உள்ளது. இதில் வீரன் ஒருவன் வலது கையில் உள்ள வாளை நிலத்தில் குத்திட்டு ஊன்றியும், இடது கையில் உள்ள நீண்ட வாளால் தன் தலையை அரிந்தவாறும் நிற்கிறான். வீரர்களுக்கேயுரிய இடைக்கட்டோடு கூடிய அரையாடை தொடை வரை அணிந்த நிலையில் இரு கால்களையும் பக்கவாட்டில் தளர்வாக வைத்த நிலையிலும், உடலை நேராக வைத்தவாறும் உள்ளான். இடைக்கட்டு ஆடையின் முடிச்சு வலதுபுறத்தில் உள்ளது. கழுத்து, கைகளில் அணிகள் உள்ளன.
குறிப்புதவிகள்
நடுகல் தலைப்பலி வீரன்
சிற்பம்

நடுகல் தலைப்பலி வீரன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்