சிற்பம்

கௌமாரி

கௌமாரி
சிற்பத்தின் பெயர் கௌமாரி
சிற்பத்தின்அமைவிடம் திருமூலநாதர் கோயில்
ஊர் பேரங்கியூர்
வட்டம் திருவெண்ணெய்நல்லூர்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/சம்புவராயர்
விளக்கம்
சப்தமாதர்களில் ஒருவராக விளங்கும் கௌமாரத்தின் பெண் தெய்வம் கௌமாரி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கௌமாரன் எனப்படும் முருகனின் பெண் அம்சமே கௌமாரி ஆவாள். கௌமாரத்தின் பெண் தெய்வம் கௌமாரி. கௌமாரி சிவப்பு நிற ஆடை அணிந்தவள். எட்டுத்திக்கிற்கும் உரியவள். இத்தேவி முருகனுக்குரிய, கரண்ட மகுடம், வஜ்ராயுதம், சக்திப்படை இவைகளை உடையவளாயிருப்பாள். இச்சிற்பத்தில் கௌமாரி கரண்ட மகுடம் தரித்தவராயும், பின்னிரு கைகளில் வஜ்ரப்படையையும், கமண்டலத்தையும் பிடித்தவராயும் காணப்படுகிறார். முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும், வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். நீள்செவிகளில் பத்ர குண்டலங்களும், மார்பில் முப்புரிநூலும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவடி, கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். மார்பில் குஜபந்தம் என்னும் மார்புக் கச்சை அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட முழாடை முழங்காலுக்கு கீழ் வரை மடிப்புகளுடன் காட்டப்பட்டுள்ளது. வலது கால் சிதைந்துள்ளது. இடைக்கட்டின் கடி பந்தம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் தொடையில் காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கௌமாரி
சிற்பம்

கௌமாரி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 12
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்