சிற்பம்

பூதகணங்கள்

பூதகணங்கள்
சிற்பத்தின் பெயர் பூதகணங்கள்
சிற்பத்தின்அமைவிடம் திருமூலநாதர் கோயில்
ஊர் பேரங்கியூர்
வட்டம் திருவெண்ணெய்நல்லூர்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன்
விளக்கம்
கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் கொடுங்கையின் கீழ் காட்டப்படும் பூதவரி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பூத கணங்கள் என்பது அவர்களின் தோற்றத்தினைக் குறிப்பதேயாகும். குள்ள வடிவத்துடனும், பெரிய, தடித்த முகம், உருட்டும் விழிகளைக் கொண்டிருக்கும் மானுடத்தில் ஒரு வகைப் பிரிவினர். கணங்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர். இவ்வகையில் ஒரு வகையின் பூத கணங்கள் ஆவர். பூத கணங்கள் சிவபெருமானின் படைகளாகும். இப்பூத கணங்கள் சிவன் கோயில்களில் விமானத்தின் கூரைப்பகுதியில் கொடுங்கையின் கீழ் வரிசையாகக் காட்டப்படுவதுண்டு. இப்பூதங்கள் அங்கசேஷ்டைகள் செய்பவனவாகவும், ஆடல் பாடலில் ஈடுபடுவதாகவும், இசைக்கருவிகளை முழக்குவதாகவும் அமைந்திருக்கும். இச்சிற்ப வரிசையில் காற்றுக் கருவி ஒன்றை ஒன்றன் காதில் ஒன்று என்று வரிசையாக ஊதுகின்றன. கணங்களின் இச்செயலானது குழந்தைகளின் விளையாட்டை நினைவு படுத்துகிறது.
குறிப்புதவிகள்
பூதகணங்கள்
சிற்பம்

பூதகணங்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 18
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்