சிற்பம்
ஐந்தரி (இந்திராணி)
ஐந்தரி (இந்திராணி)
சிற்பத்தின் பெயர் | ஐந்தரி (இந்திராணி) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குன்னாண்டார் கோயில் |
ஊர் | குன்னாண்டார் கோயில் |
வட்டம் | கீரனூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
அன்னையர் எழுவரில் இந்திரனின் பெண் சக்தியாக விளங்கும் ஐந்தரி எனப்படும் இந்திராணி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இந்திரனின் பெண் கூறாக விளங்குபவள் ஐந்தரி, மாஹேந்திரி என்றழைக்கப்படும் இந்திராணி. விஷ்ணுதர்மோத்திரம், இந்திராணி ஆயிரம் கண்களை உடையவர் என்று குறிப்பிடுகிறது. பொன்னிற மேனியையும், ஆறு கரங்களில் சூத்திரம், வஜ்ஜிரம், கலசம், பாத்திரம், அபயம், வரதம் தரித்திருப்பார் என்று குறிப்பிடுகிறது. தேவி புராணம் கூறுகையில் அங்குசமும் வஜ்ஜிரமும் தரித்திருப்பதாகவும், பூர்வகாரணாகமம் இரண்டு கண்கள் மட்டுமே பெற்றவர் என்று குறிப்பிடுகிறது. மூன்று கண்கள், நான்கு கரங்களைக் கொண்டவர். இரண்டு கரங்களில் வஜ்ரமும், சக்தியும், இரண்டு கரங்களில் அபயமும் வரதமும் கொண்டவர். சிவந்த மேனியை உடையவர். கிரீட மகுடம் தரித்து அனைத்து வித அணிகலன்களும் அணியப் பெற்றவர். இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் (வெள்ளை யானை) இலச்சினை பொறிக்கப் பெற்ற கொடியுடன் கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார். இச்சிற்பத்தில் இந்திராணி பூரிமத்துடன் கூடிய இரத்தின கிரீட மகுடம் தரித்தவராயும், பின்னிரு கைகளில் அரசிலை வடிவான ஆயுதம் மற்றும் சக்கரத்தை ஏந்தியவராயும் காணப்படுகிறார். நெற்றியில் தொய்யகமாய் நெற்றிப்பட்டை விளங்குகிறது. முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும், வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். நீள்செவிகளில் மகர குண்டலங்களும், மார்பில் சன்ன வீரமும், கழுத்தில் கண்டிகையும், சரப்பளியும், தோள்களில் தோள் மாலையும், கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட முழாடை முழங்காலுக்கு கீழ் வரை காட்டப்பட்டுள்ளது. கால்களில் சிலம்பும், சதங்கையும் அணி செய்கின்றன. இடைக்கட்டின் கடி பந்தம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் தொடையில் காட்டப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
ஐந்தரி (இந்திராணி)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
அடியவரான அரசர்
அடியவரான அரசர்
அரச உருவம், கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
13
|
0
|
0
|
0
அடியவரான அரசர்
அடியவரான அரசர்
அரச உருவம், கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
15
|
0
|
0
|