சிற்பம்
யாளி
யாளி
சிற்பத்தின் பெயர் | யாளி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கொடும்பாளுர் மூவர் கோயில் |
ஊர் | கொடும்பாளுர் |
வட்டம் | விராலிமலை |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | பிற வகை |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
விளக்கம்
தாங்குதளத்தில் அமைந்துள்ள யானை யாளி வரிசை
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும்அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப் பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாளி ” என்றும், ஆட்டுத்தலை கொண்டதை ” மகர யாளி ” என்றும், யானை முகத்தை “யானை யாளி ” என்றும் அழைக்கிறார்கள். யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக இந்துக் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம். தாங்குதளத்தில் அமைந்துள்ள இவ்வகை யாளி யானை யாளி என்ற வகையைச் சார்ந்தது. தும்பிக்கையுடன் அமைந்துள்ளது. சிங்கம் போன்ற பிடரி காணப்படுகிறது. யாளிக்கான கொம்பும் கொண்டுள்ளது. பாய்ந்த நிலையில் கால்களை வைத்துள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யாளி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |