சிற்பம்

மகாவீரர்

மகாவீரர்
சிற்பத்தின் பெயர் மகாவீரர்
சிற்பத்தின்அமைவிடம் பாலவநத்தம்
ஊர் பாலவநத்தம்
வட்டம் காரியாபட்டி
மாவட்டம் விருதுநகர்
அமைவிடத்தின் பெயர் கைலாசநாதர் கோயில் அருகில்
சிற்பத்தின் வகை சமணம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
சதுரவடிவமான தாங்குதளத்தின் மீது மகாவீரர் முக்குடையின் கீழ் தியானகோலத்தில் கண்களை மூடி, திக்குகளையே ஆடையாகக் கொண்டவராக பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். தீர்த்தங்கர்ரின் இருபுறமும் இரு சாமரவீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கீழே இருபுறமும் பாய்ந்த நிலையில் நிற்கும் சிம்மங்களைக் கொண்ட பின்தாங்கி ஒன்று முனிவரின் பின்னால் காட்டப்பட்டுள்ளது. சுருள்வடிவாய் காட்டப்பட்டுள்ள அசோக மரத்தின் கீழ் சிரஸ்திக சுருள் முடியுடன் கூடிய தலையணி கொண்டவராய் காட்டப்பட்டுள்ளார்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தமிழகத்தின் பல ஊர்களில் சமணக் கோயில்கள் அமைந்துள்ளன.கோயில்கள் தவிர்த்து சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உதிரிச் சிற்பங்களாக ஆங்காங்கே மக்களால் வழிபாட்டிலும், சிதைந்த நிலையில் வழிபாடற்றும் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கைலாசநாதர் கோயிலின் அருகில் காணப்படும் மகாவீரரின் சிற்பம் குறிப்பிடத்தகுந்தது.
குறிப்புதவிகள்
மகாவீரர்
சிற்பம்

மகாவீரர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_SCL_001337/TVA_SCL_001337_ப...

  • TVA_SCL_001337/TVA_SCL_001337_ப...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 60
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்