Back
கல்வெட்டு
பொகலூர் சிறுகுன்று
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பொகலூர் சிறுகுன்று
ஊர் பொகலூர்
வட்டம் குடியாத்தம்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் பொகலூர் சிறுகுன்றின் அடிவாரம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
பலகைக் கல்லின் ஒருபக்கத்தில் இடது காலை முன்வைத்த நிலை யில் ஒரு வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவக் கொண்டையுடைய அவ்வீரனின் வலக்கையில் கீழ்நோக்கிய நீண்ட கத்தியும், இடக்கையில் வில்லும் உள்ளன. மூன்று அம்புகள் உடலைத் துளைத்துள்ளன. நடுக்கல்லின் வலப்புற மேல்பகுதியில் இரு பெண்களுக்கு நடுவே அமர்ந்த நிலையில் வீரனின் உருவம் ஒன்றும் உள்ளது. கீழ்ப்பகுதியில் மூடியுடனுள்ள பூரண கும்பம் ஒன்றுள்ளது. அதன் அருகே இரண்டு காளைகள் செதுக்கப்பட்டுள்ளன. வீரனின் உருவத்தைச் சுற்றி 10-ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்துகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவத்திற்கு வலப்புறத்தில் கிரந்த எழுத்தில் முதல் வரி வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மற்ற பகுதியில் கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்படவில்லை . 7, 8 வரிகள் மேலிருந்து கீழாக வெட்டப்பட்டுள்ளன. பார்த்திவேந்திர வர்மனின் 16ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 972) இந் நடுகல் வெட்டப்பட்டது. பராந்தகய நல்லாண்டார் என்பார் விளத்தூரில் நடைபற்ற போரில் ஈடுபட்டு மாண்டதன் நினைவாக இந்நடுகல் எடுப்பிக்கப் பெற்றது.
குறிப்புதவிகள்
பொகலூர் சிறுகுன்று
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001914/TVA_INS_001914_வ...

  • TVA_INS_001914/TVA_INS_001914_வ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 86
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு