கல்வெட்டு
பழங்கூர் ஏரி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பழங்கூர் ஏரி |
|---|---|
| ஊர் | பழங்கூர் |
| வட்டம் | திருக்கோவிலூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| அமைவிடத்தின் பெயர் | பழங்கூர் ஏரி மதகுத் தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டத்தில் பழங்கூர்ஏரி ஐரோப்பியப் பொருளாதார உதவியுடன் செப்பனிடப்பட்டது. அந்த ஏரியில் பழைய மதகின் உள்வாய் ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. நாழிகை வாயில், சேத்தடி துளைகளுடன் கூடிய மதகு, அதன் இரண்டு தூண்களும் நல்ல நிலையில் உள்ளன. தூணின் மேற்பலகைக்கல் விழுந்து விட்டது. தூண்களை ஒட்டிய பின்புறச் செங்கல் சுவர் இன்றும் உள்ளது. பூச்சுப்பெறாத பழைய செங்கல் சுவர் கரையிலிருந்து சுமார் 20 அடி உள் வாங்கி அமைந்துள்ளது. புதிய மதகு அருகில் கட்டப்பட்டுள்ளது. பழைய மதகுத் தூண்களில் ஒன்றில் கல்வெட்டு காணப்படுகிறது. மலையன் மலையனான குலோத்துங்க சோழக்கோவலராசன் என்பவர் திட்டிட்டு வென்றான் என்ற பெயருடைய தூம்பொன்றினை எடுத்த தகவல் இக்கல்வெட்டால் பெறப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 1, தமிழகத் தொல்லியல் கழகம், 1991
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 97 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |