Back
சிற்பம்

மகரக்கூடு விநாயகர்

மகரக்கூடு விநாயகர்
சிற்பத்தின் பெயர் மகரக்கூடு விநாயகர்
சிற்பத்தின்அமைவிடம் குற்றாலம் அகழ் வைப்பகம்
ஊர் குற்றாலம்
வட்டம் தென்காசி
மாவட்டம் தென்காசி
அமைவிடத்தின் பெயர் குற்றாலம் அகழ் வைப்பகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.-10-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

திருநெல்வேலி மாவட்டம் மன்னார் கோயிலில் இருந்து இக்கூடுமுக விநாயகர் சிற்பம் கொண்டுவரப்பட்டு குற்றாலம் அகழ் வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இச்சிற்பத்தின் உருவமைதியைக் கொண்டு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கூடுமுகம் என்பது கோயிற் கட்டடக்கலையில் விமானத்தின் கூரைக்கு மேல் உள்ள பகுதியில் அமைக்கப்படுவதாகும். இது மகரதோரணத்தைப் பெற்று நடுவில் ஒரு புடைப்புச் சிற்பத்தைப் பெற்றிருக்கும். அவ்வகையில் இந்த கூடுமுகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள விநாயகர் காட்டப்பட்டுள்ளார்.

ஒளிப்படம்எடுத்தவர் திரு.தெ.பொன் கார்த்திகேயன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

கோயிற் கட்டடக் கலைகளுள் ஒன்றான விமானத்தில் அமைக்கப்படும் ஓர் உறுப்பு கூடுமுகம் ஆகும். இக்கூடுமுகம் மகரதோரணத்துடன் நடுவில் முகம் போன்ற சிறிய உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கும். இந்த மகரதோரணத்தின் நடுவே வடிக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிற்பம் கூடுமுக சிற்பம் என்று அழைக்கப்படும்.

மகரக்கூடு விநாயகர்
சிற்பம்

மகரக்கூடு விநாயகர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 29 Aug 2022
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்