சிற்பம்

திருமால்

திருமால்
சிற்பத்தின் பெயர் திருமால்
சிற்பத்தின்அமைவிடம் குற்றாலம் அகழ் வைப்பகம்
ஊர் குற்றாலம்
வட்டம் தென்காசி
மாவட்டம் தென்காசி
அமைவிடத்தின் பெயர் குற்றாலம் அகழ் வைப்பகம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.-8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

திருமால் நின்ற நிலையில் நான்கு கைகளுடன் உள்ளார். இச்சிற்பம் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முற்காலப் பாண்டியர்களின் கலைப்படைப்பாக காட்சியளிக்கிறது. கிரீட மகுடம் தரித்து, பின்னிரு கைகளில் சங்கு சக்கரத்தைக் கொண்டுள்ளார். முன் வலது கை சிதைந்துள்ளது. முன் இடது கை கடிமுத்திரையாக இடையில் வைக்கப்பட்டுள்ளது. நீள் செவிகளில் மகரகுண்டலங்களும், மார்பில் தடிமனான யக்ஞோபவீதமும், வயிற்றில் உதரபந்தமும், மார்பில் கண்டிகை மற்றும் சரப்பளியும் அழகு செய்கின்றன. சிரித்த முகத்துடன் திருமாலின் உருவம் கலைநயம் மிக்கதாய் அமைந்துள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் திரு.தெ.பொன் கார்த்திகேயன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமால் சிற்பம் முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைப் பெற்று விளங்குகிறது. துவரங்காடு என்னும் ஊரில் இச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டு குற்றாலம் அகழ் வைப்பகத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

திருமால்
சிற்பம்

திருமால்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 29 Aug 2022
பார்வைகள் 162
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்