சிற்பம்

நவகண்ட வீரர்
சிற்பத்தின் பெயர் | நவகண்ட வீரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருக்கரை ஈசுவரர் கோயில் |
ஊர் | மானாம்பதி |
வட்டம் | திருப்போரூர் |
மாவட்டம் | செங்கல்பட்டு |
அமைவிடத்தின் பெயர் | திருக்கரை ஈசுவரர் கோயில் வளாகம் |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.13-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
தலையை வாளால் அரிந்து கொண்டு நின்ற நிலையில் உள்ள வீரனின் இச்சிற்பம் சோழர் காலத்தியதாகும். தலைப்பலி அல்லது அரிகண்டம் எனப்படும் இச்சிற்பத்தில் உள்ள இளம் வீரன் தன் வலது கையில் உள்ள வாளால் தலையை அரிந்து கொள்கிறான். திரிபங்க நிலையில் நிற்கும் இவ்வீரனின் தலையணி உச்சிக் கொண்டையாக காணப்படுகின்றது. நீள்காதுகளில் குண்டலங்கள் காணப்படுகின்றன. இடையில் இடது கையை வைத்தபடி புன்முறுவல் பூத்த முகத்துடன் தலைப்பலி தரும் இவ்வீரனின் செறிவு பண்பாட்டின் பொலிவாகும். கழுத்தணிகளும், கையணிகளும் விளங்குகின்றன.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருப்போரூர் - செங்கல்பட்டு செல்லும் சாலையிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் மானாம்பதி அமைந்துள்ளது. இவ்வூரிலுள்ள 'அருள்மிகு பாடலாம்பிகை உடனுறை திருக்கரை ஈசுவரர்' திருக்கோயில் தூங்கானை மாடக் கோயிலாகும். இக்கற்றளி சோழர் காலத்தியது. பிற்காலத்தில் விசயநகர-நாயக்கர் திருப்பணிகளையும் பெற்று விளங்குகின்றது. இக்கோயிலின் வெளிவளாகத்தில், மதிற்சுவரில் கணபதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறு மாடத்தருகே, 'நவகண்டம்' கொடுக்கும் வீரர்களின் சிற்பங்கள் வரிசையாக காணப்படுகின்றன. தலைவனின் வெற்றிக்காக, தன் குடிக்காக, தலையை அரிந்து பலியிடும் வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்டுள்ள இவ்வகை சிற்பங்கள் தலைப்பலி சிற்பங்கள் அல்லது அரிகண்டச் சிற்பங்கள் எனப்படுகின்றன. நடுகல், வீரக்கல், நினைவுக்கல் என்ற வகைகளில் இவ்வாறாக எடுக்கப்பட்டுள்ள இந்த அரிகண்ட சிற்பங்கள் தனிச்சிற்பங்களாக காணப்படுகின்றன. பிற்காலச் சோழர் காலமான கி.பி.13-14-ஆம் நூற்றாண்டு, மற்றும் விசயநகர-நாயக்கர் காலமான 15-16-ஆம் நூற்றாண்டு காலத்திய சிற்பங்களாக 7 அரிகண்ட வீரர்களின் உருவங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இங்கே கொணரப்பட்டதா அல்லது இவ்வூரை மட்டும் சேர்ந்த சிற்பங்களா என்பதை அறியக்கூடவில்லை. ஆயினும் இச்சிற்பங்களில் உள்ள வீரர்களின் உருவமைதி ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாக அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Mar 2020 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |