சிற்பம்
நவகண்ட வீரன்
சிற்பத்தின் பெயர் நவகண்ட வீரன்
சிற்பத்தின்அமைவிடம் திருப்புலிவனம்-வேலாத்தம்மன் கோயில்
ஊர் திருப்புலிவனம்
வட்டம் உத்தரமேரூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் வேலாத்தம்மன் கோயில்
சிற்பத்தின் வகை நடுகல் புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-12-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
வீரன் ஒருவன் தன் தலையை தன் நீண்ட வாளால் அரிந்து கொள்கிறான். இச்சிற்பம் தலைப்பலிச் சிற்பம் அல்லது நவகண்டச் சிற்பம் எனப்படும். சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள வீரன் தன் வலது கையை நிலத்தில் குத்தியுள்ள வாளின் மீது வைத்துள்ளான். இடது கையால் கழுத்தை அரிகிற நிலையிலும் திடமான அவனது முகம் தெரிகின்றது. இடதுபக்கம் முடியப்பட்டுள்ள அவனது கொண்டை பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. காதுகளில் பெரிய பனையோலைச் சுருள் செருகப்பட்டுள்ளது. வீரனுக்குரிய அரையாடை அணிந்துள்ளான். ஆடையின் முடிச்சுகள் இருபுறமும் பறந்தபடி உள்ளன. கையணிகள், கழுத்தில் ஆரம் முதலியன அணிகலன்களாக அமைந்துள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.பாலாஜி பாரதி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
நவகண்ட சிற்பங்கள் தமிழ்நாட்டில் பல ஊர்களில் கிடைத்திருக்கின்றன. இதை “சாவான் சாமி’ என்ற பெயரில் வழிபாடு செய்து வருகின்றனர். வீரர்கள் தங்கள் தலையை தாங்களே அரிந்து தலைப்பலி கொடுப்பது பற்றி இலக்கியங்களில் நிறைய சான்றுகள் உள்ளன. கலிங்கத்துப் பரணியிலும் பாடல் ஒன்றும் இதை உறுதிசெய்கிறது. தமிழகத்தில் 7-ஆம் நூற்றாண்டு முதல் 13 நூற்றாண்டு வரையில் பேரரசுகள் உருவாக்கிய கோயில்களில் இச்சிற்பங்கள் காணப்படுகின்றன. நவகண்ட தனிச்சிற்பங்கள் கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு வரை பரவலாகக் கிடைக்கின்றன. அத்தகையதொரு நவகண்ட சிற்பம் காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனம் சிவன் கோயில் அருகிலுள்ள வேலாத்தம்மன் கோயில் முன்பு ஊர்மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது. இச்சிற்பம் பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
நவகண்ட வீரன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 70
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்