சிற்பம்
சதிக்கல்
சிற்பத்தின் பெயர் சதிக்கல்
சிற்பத்தின்அமைவிடம் ஸ்ரீஅமணேசுவரர் கோயில்
ஊர் தேவனாம்பாளையம்
வட்டம் கிணத்துக்கடவு
மாவட்டம் கோயம்புத்தூர்
அமைவிடத்தின் பெயர் ஸ்ரீஅமணேசுவரர் கோயில் அருகே அமைந்துள்ள ஆலமரத்தடி
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
விளக்கம்
இறந்துபட்ட வீரனோடு உயிர்துறந்த வீரப்பெண்ணான அவன் மனைவிக்கும் நினைவுக்கல் எடுக்கப்பட்டுள்ளது. கைகளை கூப்பிய நிலையில காணப்படும் இச்சிற்பம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த்து என்பதை சிற்பத்தின் ஆடையணிகள் மற்றும் தலைக்கோலம் காட்டுகின்றது. அருகில் போரில் இறந்த வீரனும் கைகளைக் கூப்பிய நிலையில் காணப்படுகின்றான்.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தேவனாம்பாளையம் ஊராட்சி  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அமணீசுவர்ர் கோயிலின் அருகே உள்ள ஆலமரத்தின் கீழே சதிக்கல் சிற்பங்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன. இங்கு நான்கு சதிக்கற்கள் கிடக்கின்றன. அதில் ஒன்றான இந்த சதிக்கல் பெண் தனியாக வணங்கிய நிலையிலும், ஆண் தனியாக வணங்கிய நிலையிலும் தனித்தனி புடைப்புச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளனர், வீரனின் சிற்பத்தை விட அவனுடன் மாய்ந்த அவன் தேவியின் சிற்பம் சற்று உயரம் குறைவாகக் அமைந்துள்ளது.
குறிப்புதவிகள்
சதிக்கல்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்