சிற்பம்
சதிக்கல்
சிற்பத்தின் பெயர் சதிக்கல்
சிற்பத்தின்அமைவிடம் ஸ்ரீஅமணேசுவரர் கோயில்
ஊர் தேவனாம்பாளையம்
வட்டம் கிணத்துக்கடவு
மாவட்டம் கோயம்புத்தூர்
அமைவிடத்தின் பெயர் ஸ்ரீஅமணேசுவரர் கோயில் அருகே அமைந்துள்ள ஆலமரத்தடி
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
விளக்கம்
தேவனாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீஅமணீசுவரர் கோயிலின் அருகே உள்ள ஆலமரத்தின் கீழே வைக்கப்பட்டுள்ள நடுகல் புடைப்புச்சிற்பங்கள் கவனிக்கத்தக்கவை. இவை சதிக்கற்களாக உள்ளன. சதிக்கல் என்பது வீரநங்கையருக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். இறந்துபட்ட வீரனோடு தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட மனைவிக்கும், போரிட்டு மடிந்த பெண்களுக்கும், தன் குடிக்காக, கற்பிற்காக, மானத்திற்காக தீப்பாய்ந்து உயிர் துறந்த வீரப்பெண்மணிகளின் நினைவாக எடுப்பிக்கப்பட்டு வழிபடப்பட்டதே சதிகல் என்பதாகும். தேவனாம்பாளையத்தில் காணப்படும நான்கு சதிக்கற்களில் ஒன்றாக இந்த கல் நீள் செவ்வக வடிவ பலகைக்கல்லில் அறுவர் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். சிற்பம் சிதிலமடைந்துள்ளது. கையில் வாளுடன் மூன்று பெண்களும், வணங்கிய நிலையில் ஒருவரும் உள்ளனர்.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தேவனாம்பாளையம் ஊராட்சி  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அமணீசுவர்ர் கோயிலின் அருகே உள்ள ஆலமரத்தின் கீழே சதிக்கல் சிற்பங்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன. இங்கு நான்கு சதிக்கற்கள் கிடக்கின்றன. அதில் ஒன்றான இந்த கன்னியர் அறுவர் சதிக்கல் குறிப்பிடத்தக்கது. நீண்ட பலகைக்கல்லில் வரிசையாக ஆறு பெண்கள் நின்ற நிலையில் புடைப்புச் சிற்பமாக காட்டப்பட்டுள்ளனர்.
குறிப்புதவிகள்
சதிக்கல்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்