சிற்பம்
விஷ்ணு
சிற்பத்தின் பெயர் விஷ்ணு
சிற்பத்தின்அமைவிடம் கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்
ஊர் கோயில் தேவராயன்பேட்டை
வட்டம் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
விளக்கம்
விஷ்ணு சமபாதத்தில் நான்கு திருக்கைகளுடன் பீடத்தின் மீது நின்றுள்ளார். பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்தினை ஏந்தியுள்ளார். முன்னிரு கரங்களில் வலது அபயமுத்திரையும், இடது கடி முத்திரையும் காட்டுகின்றன. கிரீட மகுடம் தலையை அலங்கரிக்கிறது. செவிகளில் மகர குண்டலங்கள் விளங்குகின்றன. மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவடி ஆகிய அணிகள் விளங்குகின்றன. கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை அணிந்துள்ளார். தொடையின் மீது கடி சூத்திரம் வளைவாக தொங்குகிறது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் பண்டாரவாடையை அடுத்துள்ள கோயில் தேவராயன்பேட்டை என்னும் ஊரில் மச்சபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. திருச்சேலூர் கோயில் தேவராயன்பேட்டை என்றழைக்கப்படுகின்ற இவ்வூரிலுள்ள இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பாடல் பெற்ற தலமான இக்கோயில் சிற்பங்கள் முற்கால சோழர் கலைப்பாணியை தெற்றென விளக்கி நிற்பவை. இங்குள்ள மேற்குபுற தேவகோட்டத்தில் உள்ள விஷ்ணு நின்ற நிலையில் நான்கு திருக்கைகளுடன் காட்டப்பட்டுள்ளார்.
குறிப்புதவிகள்
விஷ்ணு
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்