சிற்பம்

விஷ்ணு

விஷ்ணு
சிற்பத்தின் பெயர் விஷ்ணு
சிற்பத்தின்அமைவிடம் கழுகு மலை வெட்டுவான் கோயில்
ஊர் கழுகு மலை
வட்டம் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
சங்கு சக்ரதாரியாய் விளங்கும் திருமால்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
விஷ்ணு உத்குடிகாசனத்தில் வலது காலை குத்துக்காலிட்டு, இடது காலை தொங்கவிட்டு பீடத்தின் மீது வைத்து, இடது கையை ஆசனத்தில் படுத்த நிலையில் (நித்ரா ஹஸ்தம்) ஊன்றி, சிதைந்துள்ள வலது கையை குத்துக்காலிட்டுள்ள வலது காலின் மீது வைத்து அமர்ந்துள்ளார். கிரீட மகுடராய், நெற்றிப்பட்டை அழகு செய்ய, நீள் காதுகளில் மகரகுண்டலங்கள் தரித்து காட்சியளிக்கிறார். கழுத்தில் சரப்பளி அணி செய்கின்றது. மார்பிலும், வயிற்றிலும் மணிகள் பதிக்கப்பட்ட யக்ஞோபவீதமும், உதரபந்தமும் அணிந்துள்ளார். முத்து அல்லது மணிகளால் அமைந்த உரஸ் சூத்திரம் முப்புரி நூலிலிருந்து பிரிந்து கீழே இடை வரை செல்கிறது. மகரப் பூரிமம் அமைந்த தோள்வளைகள் காட்டப்பட்டுள்ளன. மணிகள் பதிக்கப் பெற்ற முன்வளைகள் மூன்று இரு கைகளிலும் அழகு செய்கின்றன. பின்னிரு கைகளில் விரல்களின் நுனியில் பிரயோகச் சக்கரமும், சங்கும் கொண்டுள்ளார். கணுக்கால் வரை நீண்ட பட்டாடையின் கொசுவம் வயிறில் தெரிகின்றது. முகப்புடன் கூடிய அரைப்பட்டிகை இடையில் விளங்க, இடைக்கட்டு ஆடையின் முடிச்சு இருபுறமும் ஆசனத்தில் பரந்து, விரிந்து காட்டப்பட்டுள்ளன. காலில் சதங்கைகள் அணியப் பெற்றுள்ளன. சிரித்த முகம் அழகு சிரித்த முகம் எனக் கூறுவதற்கேற்றவாறு சாந்தமூர்த்தியாய் காணப்படுகின்றார்.
குறிப்புதவிகள்
விஷ்ணு
சிற்பம்

விஷ்ணு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்