Back
சிற்பம்
தாய்த்தெய்வ நடுகல்
சிற்பத்தின் பெயர் தாய்த்தெய்வ நடுகல்
சிற்பத்தின்அமைவிடம் மலையம்பாளையம் விநாயகர் கோயில்
ஊர் மலையம்பாளையம்
வட்டம் அவிநாசி
மாவட்டம் திருப்பூர்
அமைவிடத்தின் பெயர் மலையம்பாளையம் விநாயகர் கோயில்
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்
பெண்களுக்காக எடுப்பிக்கப்பட்ட நடுகற்கள் மிக மிகக் குறைவே. அவையும் சதிக்கற்களாகவே அமைந்துள்ளன. ஆனால் தாய்த்தெய்வத்திற்கு எடுப்பிக்கப்பட்டுள்ள இந்த நடுகல் அதுவும் முல்லைத்திணை மகளுக்கு எடுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடுகல்லின் தோற்றமே முல்லைத் திணையாகும். கால்நடைகள் சார்ந்த முல்லைத் திணை வாழ்வியலில் பெண்களின் பங்கு இரண்டாம் நிலையிலேயே இருந்தது. இறந்துபட்ட வீரர்களின் நடுகற்களே அதிகளவில் கிடைக்கின்றன. அந்நிலையில் இந்த நடுகல் புடைப்புச் சிற்பத்தில் குழந்தை ஒன்றை இடையில் ஏந்திய தாய் ஒருத்தியின் காலருகே இருபுறமும் எருதும் பசுவும் காட்டப்பட்டுள்ளன. இப்பெண்ணின் தலையலங்காரத்தைக் கொண்டு இச்சிற்பம் கி.பி.-15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அறியப்படுகிறது. தன்னுடைய ஆநிரைகளைக் காப்பதற்காக இப்பெண் செய்த ஏதோவொரு வீரச்செயல் புரிந்த அவளின் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளமையை அறியமுடிகிறது.
ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் அமைந்துள்ள மலையம்பாளையம் என்னும் ஊரின் விநாயகர் கோயிலை அடுத்து இந்த தாய்த்தெய்வ நடுகல் அமைந்துள்ளது. நீள்வட்ட வடிவ பலகைக் கல்லில் பெண் தெய்வ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் இடையில் ஒரு குழந்தையை வைத்துள்ளாள். அவள் கால்களுக்கருகே இருபுறமும் வலப்புறம் எருதும், இடப்புறம் பசுவும் நின்ற நிலையில் உள்ளன. அமைந்துள்ள இந்த நடுகல் சிற்பத்தின் உருவமைதியைக் கொண்டு விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக கருத இடமுண்டு.
குறிப்புதவிகள்
தாய்த்தெய்வ நடுகல்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Mar 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்