சிற்பம்
தாய்த்தெய்வம்
சிற்பத்தின் பெயர் தாய்த்தெய்வம்
சிற்பத்தின்அமைவிடம் சென்னை அரசு அருங்காட்சியகம்
ஊர் எழும்பூர்
வட்டம் எழும்பூர்
மாவட்டம் சென்னை
அமைவிடத்தின் பெயர் அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை செப்புத்திருமேனி
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் பெருங்கற்காலம்
விளக்கம்
ஆதிச்சநல்லூர் தாய்த்தெய்வம் பெருத்த இடையையும், பருத்த தனங்களையும் கொண்ட வளமை வழிபாட்டுக் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. இப்பெண் தெய்வம் அணிந்துள்ள ஆடை வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. கழுத்தோடு விரிந்து நிற்கும் மேலாடை வடிவமைப்பு நோக்கி ஆராயத்தக்கது. இது கம்பளி ஆடையாக இருக்கலாம். ஆடையின் குஞ்சங்கள் நீண்டு தொங்குகின்றன.
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த தொல்கலைப் பொருட்களுள் வெண்கலத்தால் ஆன தாய்த்தெய்வத்தின் படிமம் குறிப்பிடத்தக்கது. இந்த பெண் தெய்வத்தின் உருவம் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்படிமத்தில் காட்டப்பட்டுள்ள பெண்ணுருவத்தின் ஆடையணிகள் முற்றிலும் ஆய்வுக்குரியவையாக கருதப்படுகிறது. வளமைக்குறியீடாக இப்படிமம் வழிபடப்பட்டு வந்திருக்கலாம். இப்படிமத்தின் உருவமைதியின் செழிமையை வைத்து அக்கால ஆற்றங்கரை நாகரிக மக்களின் வளமான வாழ்வை அறிய முடிகிறது.
குறிப்புதவிகள்
தாய்த்தெய்வம்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்