Back
சிற்பம்
கூடுமுக சிற்பங்கள்
சிற்பத்தின் பெயர் கூடுமுக சிற்பங்கள்
சிற்பத்தின்அமைவிடம் திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோயில்
ஊர் திருப்புறம்பியம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் சாட்சிநாதேசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை கலை மற்றும் வாழ்வியல்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-12-ஆம் நூற்றாண்டு / சோழர்
விளக்கம்
சோழர்கள் காலத்தில் கோயில்களின் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் ஒன்றொடொன்று இயைந்த நிலையில் புதுப் பாணியாக பரிணமித்தது. கருவறை விமானம், மண்டபங்கள் போன்ற கட்டுமானங்களில் சுவர்ப்பகுதியைத் தொடரும் கூரைப்பகுதியில் காணப்படும் உறுப்புகளில் கொடுங்கை எனப்படும் கபோதத்தின் மேல் வரிசையாக கூடுமுகங்கள் எனப்படும் நாசிகை உறுப்பு அமைக்கப்படுவது மரபு. இந்த நாசிகைகளில் நடுவில் சிறு புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்படும். அவை பல்லவர் மற்றும் முற்காலச் சோழர்கள் காலத்தில் மனித உருவங்களின் முகம், பறவை, விலங்குகளின் முகமாய் அமைந்திருந்தது. பின் வந்த பேரரசர்கள் காலத்தில் இக்கூடுமுகங்களில் புராணச் சிற்பங்களும், வாழ்வியல் காட்சிகளும், கலை நிகழ்வுகளும் குறும்புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டன. அப்பாணியில் திருப்புறம்பியம் கோயிலில் இச்சிற்பங்கள் விஷ்ணு, முருகன், இராமன் ஆகிய கடவுளர் சிற்பங்களும், வீர்ர்களின் கூத்து சிற்பங்களும், வாழ்வியல் நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கோயில்களின் கோபுரம் மற்றும் விமானத்தின் கூரைப்பகுதியில் அமைக்கப்படும் நாசிகை எனப்படும் கூடுமுகங்களில் சிறு புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்படும். அவ்வகையில் சாட்சிநாதேசுவரர் கோயிலில் புராணச் சிற்பங்களும், இறையுருவங்களும், பெண் மற்றும் கூத்துக் கலைஞர்களின் சிற்பங்களும் கூடுமுகச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46வது தலம் இதுவாகும். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பியம் போர் இத்தலத்தின் அருகில் நடைபெற்றது.
குறிப்புதவிகள்
கூடுமுக சிற்பங்கள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 7
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்