கல்வெட்டு
மாமண்டூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மாமண்டூர் |
|---|---|
| ஊர் | தூசி மாமண்டூர் |
| வட்டம் | செய்யாறு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அமைவிடத்தின் பெயர் | மகேந்திரன் குடைவரை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பல்லவர் குடவரைக் கோயில்களுக்கு வடபகுதியில் உள்ள சிறு குன்றில் ஒரு இயற்கையான குகைத்தளம் உள்ளது. இதன் முகப்புப்பகுதியில் பந்தல் அமைப்பதற்காகக் கழிகள் சொருக செதுக்கப்பட்ட இரு துளைகளுக்குக் கீழ் இக்கல்வெட்டுள்ளது. பாறையின் மேடுபள்ளங்களுக்கு ஏற்ப கல்வெட்டு நான்கு வரிகளில் இடைவெளிவிட்டு வெட்டப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் சிதைந்துள்ளன. இதன் காலம் ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டாகும். “கணிமான் தேனூர் தந்தகோன் குன்று ஆசி செயிதான் தசன் சிறு...வன்“ என்பது கல்வெட்டு வாசகம். தேனூரைக் கைப்பற்றிய தலைவனான (கோன்) கணிமான் என்பவனுடைய குன்று; இதனில் பந்தல் தாங்கும் வசதியை (ஆசி) செய்த தச்சன் சிறு...வன் என்பவன்; என இக்கல்வெட்டிற்குப் பொருள் கொள்ளலாம். தசன் என்பதில் ‘ச்’ மெய் சேர்த்து தச்சன் என்று கொள்ள வேண்டும். இக்கல்வெட்டில் முதல் எழுத்தான 'க’, மூன்றாம் எழுத்தான 'மா’ ஆகியவை தென்பிராமி எழுத்துச் சாயலைப் பெற்றுள்ளன. தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் சிற்றரசு தலைவர்களைக் குறிக்கும் கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று. தச்சனின் பெயர் வருவது தமிழகக் கட்டடக் கலை வரலாற்றிற்குச் சிறப்பாகும். 'ஒல்லையூர் தந்த பூதபாண்டியன்’ (புறம்: 71) பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி (புறம் 367 தலைப்பு) ஆகிய சங்கப்பெயர்கள் தந்த என்ற சொல்லிற்கு ‘வெற்றி பெற்ற' என்ற பொருள் தருவது இங்கு நோக்கத்தக்கதாகும். கணிமான் என்ற சொல் கற்றறிந்தவன், சோதிடன் என்று பொருள்படும். இங்கு தலைவனின் பெயராக உள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 403 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |