கல்வெட்டு
குடிமங்கலம் அரசு மருத்துவமனை - தாராபுரம் சாலை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடிமங்கலம் அரசு மருத்துவமனை - தாராபுரம் சாலை |
|---|---|
| ஊர் | குடிமங்கலம் |
| வட்டம் | தாராபுரம் |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | குடிமங்கலம் மருத்துவமனை அருகில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
குடிமங்கலம் அரசு மருத்துவமனை அருகில் தாராபுரச் சாலையின் தென்புறம் இக்கல்வெட்டு உள்ளது. பூளவாடி பிராமணர் சத்திரம் கொடைக் கல்வெட்டு என்றழைக்கப்படுகிறது. விசயநகர மன்னர் அச்சுதராய மகாராசா காலத்தில் (1529-1542) அவருடைய தென்னாட்டு ஆட்சிப் பிரதிநிதியான வாலைய தேவ மகாராசா அரசர் நன்மைக்காக ஒரு பிராமணர் சத்திரம் ஏற்படுத்தி பூளைப்பாடிக்கால்பள்ளி என்ற ஊருக்கும் பெரியமங்கலம் (குடிமங்கலம்) என்று பெயரிட்டுக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் காலம் சகாப்தம் ௲௪௱௫௰௮, அப்பசி துவாதசி. இதன் ஆங்கில வருடம் 1536 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 12 அல்லது 11-10-1536 -ஆம் நாள் அன்று இக்கொடை அளிக்கபட்டுள்ளது. நிலக்கொடை என்பதால் மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் பெற்ற வாமனர் அவதார உருவம் பொறித்து இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 141 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |