கல்வெட்டு
அரசலாபுரம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அரசலாபுரம்
ஊர் அரசலாபுரம்
வட்டம் விக்கிரவாண்டி
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகம்
குறிச்சொல்
சுருக்கம்
கி.பி., 4ம் நுாற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய கோழி நடுகல் விழுப்புரம் மாவட்டம், அரசலாபுரம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இக்கல்வெட்டு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுப் பலகையில், நின்ற நிலையில் கம்பீரமான தோற்றத்தில், 62 செ.மீ., உயரம், 55 செ.மீ., அகலம் கொண்டதாக சேவல் உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வெட்டில் கோழி என்று குறிப்பிடப்படுகிறது. கோழி உருவத்திற்கு மேல், தமிழ் மொழி வட்டெழுத்தில் இரண்டு வரிகளிலும், கீழ்ப்பகுதியில் ஒரு வரியும் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் , முகையூரு மேற்சே, ரிகு யாடிக, ருகிய கோழி என மூன்று வரிகளாக கல்வெட்டு பிரித்து குறிப்பிட்டுள்ளது. இதற்கு, முகையூர் என்ற ஊரின் மேற்சேரியில் நடந்த சேவல் சண்டையில், இறந்துபட்ட சேவல் என்பது பொருள். போரில் இறந்த வீரர்களுக்கு மட்டுமின்றி, நாய், கோழி ஆகிய உயிரினங்களுக்கும் நடுகல் எடுத்துள்ள தொன்மைச் சிறப்பினை இதன்மூலம் அறியமுடிகிறது.
குறிப்புதவிகள்
அரசலாபுரம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 207
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 4

தொடர்புடைய கல்வெட்டு