கல்வெட்டு
சே.கூடலூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சே.கூடலூர் |
|---|---|
| ஊர் | சே.கூடலூர் |
| வட்டம் | செங்கம் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அமைவிடத்தின் பெயர் | ஊரிலுள்ள கொல்லை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மகேந்திரப்பல்லவரின் 38வது ஆட்சியாண்டில் வாணகோவரையரின் மருமக்கள் கூடலில் ஆநிரைகளை கவர்ந்து சென்றபோது அவ்வூரை சேர்ந்த பொன்னரம்பனார் கொல்லகனின் சேவகன் காகண்டி அண்ணாவன் அவற்றை தன்னுயிர் தந்து மீட்டதின் நன்றிக்கடனாக அவ்வூர் இளமக்கள் நடுவித்த கல். “கோவிசைய மஇந்திர பருமற்கு முப்பத்தெட்டாவது வாணகோஅரைசரு மருமக்கள் கந்தவிண்ணனார் கூடல் தொறுக் கொண்ட ஞான்று தொறு இடுவித்துப் பட்டான் பொன்னரம்பனார் கொல்லகச்சேவகன் காகண்டி அண்ணாவன் கல் கூடல் இளமக்கள் நடுவித்த கல்“ என்பது கல்வெட்டில் வட்டெழுத்து வாசகங்களாகும்.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், தொடர் எண்: 1971/50, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
7 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 210 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |