கல்வெட்டு
வங்கட்டூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் வங்கட்டூர்
ஊர் வங்கட்டூர்
வட்டம் குடியாத்தம்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் வங்கட்டூர் துரைசாமி நாயுடு மாந்தோப்பு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
1. வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி ப 2. ன்மற்கு யாண்டு மூன்றாவது செங்குன்றத்து தூம்ப 3. டைப்பர் விக்கிரமாதித்தனாகிய தின்மசெட்டி மகன் 4. சாத்தயன் சோளனூர் ஊரழிஞ்சு தொறுக் கொ 5. ள்ளக் கொட்டுபூசல் போய்த் தொறு மீ 6 ட்டுப்பட்டான். வீரன் "கொட்டுப்பூசல் போய் தொறுமீட்டுப்பட்டான்" என கல்வெட்டு குறிக்கிறது. இக்கொட்டுப்பூசலைக் கரந்தைப் போரோடு தொடர்புடையதாகப் புறப்பொருள் வெண்பாமாலை குறிக்கிறது. சின்னையன் பேட்டையில் முன்பு படியெடுக்கப்பட்டுள்ள கம்பவர்மன் காலத்திய நடுகல் 'பூசல்லோடி' என்று குறிக்கிறது. (செங்கம் நடுகற்கள், எண்: 1971 /57) எனவே பண்டைய இலக்கிய இலக்கண மரபுகளுக்கு இந்நடுகற்கள் சான்றாக உள்ளன. ஆநிரை காக்கும் பூசலில் இறந்துபட்ட தந்தை, மகன் ஆகியோருக்காக எடுக்கப்பட்டவையாகும். தந்தையின் பெயர் விக்கிரமாதித்தனாகிய தினம் செட்டி எனவும் மகன் பெயர் சாத்தையன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பூசல் வீர பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியின் மூன்றாம் ஆட்சி யாண்டில் நிகழ்ந்துள்ளது. இதே ஆண்டில் மற்றொரு கல்வெட்டு சாத்தையன் மகன் திருவூறல் என்பான் இறந்துப்பட்டதைத் தெரிவிக்கிறது. எனவே சோளனூர் என்ற தன் ஊரில் ஆநிரை காக்கும் போரில் தந்தையுடன் மகனும் இறந்துபட்டிருத்தல் வேண்டும்.
குறிப்புதவிகள்
வங்கட்டூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001901/TVA_INS_001901_க...

  • TVA_INS_001901/TVA_INS_001901_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 82
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு