Back
கல்வெட்டு
அய்யாக்குளம் கண்மாய் கல்லுமடை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அய்யாக்குளம் கண்மாய் கல்லுமடை
ஊர் அய்யாக்குளம்
வட்டம் நத்தம்
மாவட்டம் திண்டுக்கல்
அமைவிடத்தின் பெயர் அய்யாக்குளம் கண்மாய் கல்லுமடைக்குக் கிழக்கே வயலில் உள்ள சிறிய பாறை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு அருகிலுள்ள அய்யாக்குளம் என்னும் கண்மாயின் கல்லுமடைக்குக் கிழக்கே வயல் ஒன்றில் உள்ள சிறிய பாறையில் வேளைக்காரர் எனப்பட்ட படைவீரர்களின் பெயர்கள் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 11-ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதி உடையவை. வலங்கைப் பிரிவைச் சார்ந்த வேளைக்காரர் சோழரது படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்துள்ளனர். வேண்டும் போது தமது உயிரையும் தந்து மன்னனைக் காக்கும் தியாகவீரர்களாக இவர்கள் திகழ்ந்துள்ளனர் எனப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கருதுகின்றார். சோழர் ஆட்சியின் போது பாண்டிய நாட்டிற்கு வந்த வேளைக்காரர் பெயர்களே அய்யாக்குளம் அருகிலுள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 5 கல்வெட்டுகளில் ஐந்தாவது கல்வெட்டு 5 வரிகளில் காணப்படுகின்றது. இராசேந்திர சோளன் வேளைக்காறனான கண்ட தேவப்படைச்சன் என்பது ஒரு வேளைக்காறன் பெயராகக் குறிக்கப்படுகிறது.
குறிப்புதவிகள்
அய்யாக்குளம் கண்மாய் கல்லுமடை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 76
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு