Back
கல்வெட்டு
தாளவாடி நடுகல் கல்வெட்டு
கல்வெட்டு அமைந்துள்ள இடம் தாளவாடி நடுகல் கல்வெட்டு
ஊர் தாளவாடி
வட்டம் சத்தியமங்கலம்
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் படஹள்ளி வயல்வெளி-கோடிபுரம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மூன்றாம் வீர வல்லாளனின் கீழ் மாதண்ட நாயக்கனாக அப்பகுதியினை நிர்வகித்து வந்த இம்மடி இராகுத்தராயன் கானஹள்ளி என்ற ஊரினை நிவந்தமாக கொடுத்ததை இந்நடுகல் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. நான்கு அடி உயரமும் இரண்டு அடி அகலமும் கொண்ட பழுப்பு நிற கல்லிலான நடுகல் மற்றும் சதிகல் இதுவாகும். முன்புறம் மூன்றடுக்கு நிலையிலான நடுகல் நிகழ்வுகளை புடைப்புச் சிற்பங்களாக காட்டியுள்ளனர். பின்புறத்தின் மேற்புறம் குதிரை மற்றும் சூரியன் சந்திரன் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. அதன் கீழ் 16 வரிகளை கொண்ட கல்வெட்டு சற்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. முன்புறம்; கீழிருந்து மேலாக 1. வீரன் வாள் மற்றும் கேடயத்துடன் எதிரியுடன் போர் புரியும் காட்சி. இடதுபுறம் பெண் நின்ற நிலையில் காட்டப்பட்டிருக்கிறாள். இவள் நடுகல் வீரனின் மனைவியாக இருக்கலாம். 2. இரண்டாவது நிலையில் தேவகன்னிகைகள் இருவர் தூங்கானை விளக்குகள் போன்றவற்றை கையில் பற்றியிருக்கின்றனர் உயிர்நீத்த இருவரின் ஆன்மாவை ஜோதி வடிவில் மேலோகம் எடுத்து செல்லும் காட்சி இதுவரை எங்கும் காணாத சிறப்பாகும். 3. மூன்றாம் நிலையில் சிவலோகம் லிங்கம் மற்றும் நந்தியின் முன் அமர்ந்து சதா இறைவனது திருவடியை வணங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
தாளவாடி நடுகல் கல்வெட்டு
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • TVA_INS_001347/TVA_INS_01347_ஈர...

  • TVA_INS_001347/TVA_INS_01347_ஈர...

  • TVA_INS_001347/TVA_INS_01347_ஈர...

  • TVA_INS_001347/TVA_INS_01347_ஈர...

  • TVA_INS_001347/TVA_INS_01347_ஈர...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 80
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு