கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கல்வெட்டு நாகேஸ்வரசாமி கோயில் உட்பிரகாரத்தின் வடக்குச் சுவரிலுள்ளது. கோனேரி தேவ மகாராயனின் காலத்தில் மடந்தைபாக நாயனார் கோயிலில் பலவாறாகச் சிறப்பாகப் பணிபுரிந்த மடந்தைபாகக் கொங்கராயன் என்பானுக்கு. மூன்று வேலி நன்செயும், நாள்தோறும் சோறும், சன்னதித் தெருவில் ஒரு மனையும் ஆகிய இவைகளைச் சர்வமானியமாகக் கொடுத்த செய்தி குறிக்கப்படுகிறது. மடந்தைபாக நாயனார் கோயிலோடு தொடர்புடைய அதிகாரிகளான . மடத்து முதலிகள், மாகேஸ்வரர், மூல பருஷத்தார். கோயில் நாயகம் செய்வார். தேவ கன்மிகள், பிற அனைத்துக் கொத்துக்களும் கூடி இம்முடிவினைத் தெரிவிக்கின்றனர். கோயிலொழுகு நூலில் குறிப்பிட்டுள்ள, திருச்சிப் பகுதியில் அரசுப் பணி புரிந்த சாளுவ திம்மராஜா என்பவருக்குப் பின் வந்த மன்னனான கோனேரிதேவ மகாராயனே இக்கல்வெட்டில் குறிக்கப்படும் மன்னன் என்பது. திரு. கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கருத்து. இம்மன்னன் வைஷ்ணவத்திற்கு எதிராக இருந்தான் . என்றும் கூறப்படுகிறது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 57 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |