சிற்பம்

காளி

காளி
சிற்பத்தின் பெயர் காளி
சிற்பத்தின்அமைவிடம் வேலூர் அரசு அருங்காட்சியகம்
ஊர் வேலூர்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் வேலூர் அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
பீடத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காளி காணப்படுகிறார். காளி தேவியின் நான்கு திருக்கரங்களில் பின்னிரு கைகளும், தலையும் உடைந்துள்ளன.முன்னிரு கைகளில் சூலமும் கபாலமும் ஏந்தியுள்ளாள். கணுக்கால் வரையில் மடிப்புகளுடன் கூடிய கீழாடையும், மார்பில் குஜபந்தமும் காட்டப்பட்டுள்ளன. பீடத்தின் அடியில் வீரர்களின் தலைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. தொங்கவிட்டுள்ள வலது காலை தலைப்பலி நேர்ந்த வீரனொருவனின் தலையின் மீது வைத்துள்ளாள். தோள்வளை, கை வளை, பாத கடகம், கழுத்தில் சரப்பளி ஆகிய அணிகள் விளங்குகின்றன.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
வேலூர் நகர்ப்பகுதியில் உள்ள சைதாப்பேட்டையில் இருந்து அருங்காட்சியகத்திற்கு கொணரப்பட்ட காளியின் சிற்பம் பொ.ஆ.17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். காளிதேவியின் இச்சிற்பத்தில் தலைப்பகுதி உடைந்துள்ளத.
குறிப்புதவிகள்
காளி
சிற்பம்

காளி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்