Back
சிற்பம்

காலாரி (காலசம்ஹாரமூர்த்தி)

காலாரி (காலசம்ஹாரமூர்த்தி)
சிற்பத்தின் பெயர் காலாரி (காலசம்ஹாரமூர்த்தி)
சிற்பத்தின்அமைவிடம் முக்தேஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
அட்ட வீரட்டர்களில் ஒருவராக மார்க்கண்டேயனுக்காக காலனை வதைத்த காலசம்ஹாரமூர்த்தி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சிவபெருமானை நாள்தோறும் பூஜிக்கும் 16 வயதான இளஞ்சிறான் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை காலால் எட்டி உதைத்து பீடத்தின் மேல் வலது காலை வைத்து, இடதுகாலை உயர்த்தி தூக்கி உதைக்கும் நிலையில் வைத்தவாறு அவனை எச்சரிக்கும் நிலையில் அட்டவீரட்டர்களில் ஒருவரான காலாந்தகமூர்த்தி ஆறு திருக்கைகள் பெற்றுள்ளார். எமனை எச்சரிக்கும் இடது முன்கை, நடு இடது கை நீள அங்குசத்தைக் கொண்டும், வியப்பு முத்திரைக் காட்டும் இடது பின் கை, பின் வலது கை சூலத்தை ஏந்தியவாறும், முன் வலது கை குறுவாளை ஓங்கியபடியும் இறைவன் கோபக்கனலாக உள்ளார். அவரின் காலடியில் காலன் வீழ்ந்துள்ளான். காலாரிக்கு அலங்கரிக்கப்பட்ட ஜடாமகுடம் எழில் சேர்க்கிறது. நீள்காதுகள் முன்கழுத்தில் வீழ்ந்துள்ளன. கழுத்தில் ஆபரணங்கள் காட்டப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல் அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. இடது தோளின் வழியே முப்புரிநூல் செல்கிறது. அரையாடை அணிந்துள்ள இறையனார் உருட்டிய விழிகளுடன் கோபக்கனலில் உள்ளவாறு காட்டப்பட்டுள்ளார். இறைவன் காலடியில் மல்லாந்து வீழ்ந்து கிடக்கும் எமன் தன் வலது கையால் இறைவன் தாக்குதலை பொறுத்தருளுமாறு வேண்டுகிறான்
குறிப்புதவிகள்
காலாரி (காலசம்ஹாரமூர்த்தி)
சிற்பம்

காலாரி (காலசம்ஹாரமூர்த்தி)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்